கற்குளம் வரலாறு (வெ.மு.மு.மு.கண்ணாடிகாரர் குடும்பம்

 

வெ.மு.முத்தையா நாடார் பில்டிங்

வெ.மு.முத்தையா நாடார் 


மிகவும் சிறப்பாக வாழ்ந்து வளர்ந்தோம். எங்களது முப்பாட்டன்கள் தாமிரபரணி நதிக்கரை வளர்ந்த நாகரீகம் ஆகும். சூரியனை இராமபிரானாக எண்ணி வணங்குவோம். ஆற்றில் ஏற்ப்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக மேடான பகுதிக்கு வந்து குடியமர்ந்தோம். அப்பகுதி முழுவதும் கற்கள் நிறைந்த (அங்குள்ள மலைக் கற்கள் இரவானால் மிளிரும் தன்மை கொண்டவை) இடம் என்பதால் 'கற்குளம் 'என பெயர் வைத்து காலப்போக்கில் பிராமணர்கள் வரவால் ஆழ்வார் பெயர் இணைத்து கெஜட்டில் பதிவேற்றினர். வணங்கும் கடவுள்கள் காரையார் அருள்மிகு.சொறிமுத்தையனார், தேரிக்குடியிருப்பு அருள்மிகு. கற்குவேல் அய்யனார் வரை உள்ள பரிவார தெய்வங்கள் அனைத்தும். பெரிய ஸ்தலம் திருச்செந்தூர் சுப்பிரமணியர் சங்கரன் கோவில் சங்கர ஆவூடையாச்சி குலசை முத்தாரம்மன் (முத்துமாலை யை ஆரமாக ) , உவரி சுயம்புலிங்கம் சுவாமி. கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன். ஊரில் வைத்து வழிபடும் தெய்வங்கள் அருள்மிகு கூட்டுறவு பெருமான் அருள்மிகு கள்ளவாண்ட சுவாமி அருள்மிகு பத்திரகாளி அம்மன் அருள்மிகு முத்துமாலையம்மன் அருள்மிகு பேச்சி அம்மன் அருள்மிகு கஷமாடன் சுவாமி அருள்மிகு சுடலைமாடன் சுவாமி அருள்மிகு முண்டசுவாமி சாஸ்தா ஸ்ரீவைகுண்டம் நத்தம் ஊரில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அருள்மிகு சங்கரலிங்க பூதத்தார். ஊரில் மேடான பகுதியை தேர்ந்தெடுத்து வாழ்ந்து வந்தோம். கொழும்பில் சென்று வியாபாரம் மற்றும் உண்டியக்கடை ( money transfer) நடத்தி வியாபாரத்தை பெருமளவில் நாங்களும் எம் சொந்தங்களும் வளர்த்து வந்தோம். வாய்க்கால் கரையோரம் அதிகளவில் பணை மரங்கள் உண்டு அதை பராமரிக்க கரையோரம் பனை மரம் நம்பி நிறைய குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. அவர்களில் மாந்த்ரீகம் கற்ற சில சொந்தங்கள் ஒரு பிரிவினர் மாந்த்ரீக போட்டி போட்டு தங்களுக்குள் சண்டையிட்டு மாண்டனர். பாட்டனார் பெயர் வெள்ளையா நாடார். எங்களது தாத்தா பெயர் வெ.முத்தையா நாடார் கொழும்பில் வியாபாரம் செய்தார். அவருக்கு பெண் எடுத்தது கொங்கராயக்குறிச்சி ம.சுப்பையா நாடார் வீட்டில் அவரது சகோதரி அனந்தம்மாள் அவர்களை. இவர்களுக்கு 5 பெண்குழந்தைகள் பிறந்து இறந்தன. 3 மூன்று ஆண் குழந்தைகள் மட்டுமே உயிரோடு வாழ்ந்து வளர்த்தனர். மூத்தவர் வெ.மு.முத்தையா நாடார் நடுவில் வெ.மு.இராமையா நாடார் கடைசியில் வெ.மு.வெட்டும் பெருமாள் நாடார். எங்களது தந்தை பெயர் வெ.மு.முத்தையா நாடார் அவர் பி.ஏ.வரை கல்லூரி படிப்பை முடித்து வங்கியில் காசாளராக பணிபுரிந்து, கோவப்ரடிவ் (co-operative bank) வங்கியில் செயலாளர் ஆக பணிபுரிந்தார். தனது தாய்மாமா கொங்கராயக்குறிச்சி சுப்பையா நாடார் வீட்டில் மூத்த பெண் மூக்கம்மாள் என்ற நாராயண வடிவு அவர்களை பல எதிர்ப்புகள் மீறி மணந்தார். கட்ட வேண்டிய முறைப்பெண்கள் இவரை பயங்கரமாக சாபம் இட்டு பிள்ளை இல்லாமல் செய்ய பில்லி சூனியத்தில் இறங்கினர். எல்லா எதிர்ப்பையும் மீறி வாழ்ந்து வந்தார். சில வருடங்களுக்கு பின் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு பாண்டி என்ற பெயரிட்டு வளர்த்து வந்தனர். 12 வயது ஆகும்போது சித்தப்பா இராமையா நாடார் குடும்பம் கண்டித்ததால் பயந்து கருங்குளம் புளியங்குளம் கரையில் உள்ள பாண்டிய ராசா கோவிலுக்கு சென்று ஒளிந்து இருந்துள்ளார். எங்களது தந்தை வலை போட்டி இரவு தேடிப்பார்த்தனர். தங்கள் பையன் ஜன்னி வந்து பாண்டியராஜா கோவிலில் உள்ளார் என்ற தகவலை கேட்ட எனது தந்தை கோவிலுக்கு விரைந்து சென்று பார்க்கையில் பாண்டி அவர்கள் இறந்து விட்டார். ஓ வென கதறி அழுதது ஆற்றில் எதிரொலி திருச்செந்தூர் கடல் வரை சென்றடைந்தது. எங்கள் தாய்-தந்தை இருவரும் பெரும் சோகத்தில் ஆழ்ந்து இருந்தனர். எங்களது தாய் மூக்கம்மாள் என்ற நாராயண வடிவு அவர்களின் ஆலோசனை படி இன்னும் நிறைய பிள்ளை பேறு அடைய ஊரார் வாயடைக்க முக்கூடல் காத்தப்புரம் நாட்டாமை வேலையா நாடாரின் இரண்டாம் புதல்வியை(சொர்ண காந்தி) மணம் முடிக்க ஒப்புதல் வழங்கினார். பின்னர் ஒரு குழந்தை பெற்றவுடன் தன் வம்சம் விருத்தி அடையும் என்ற சந்தோசத்தில் அன்னை மூக்கம்மாள் என்ற நாராயண வடிவு மறைந்தார். அதன் பிறகு பத்து பிள்ளைகள் பெற்று வளர்த்து வந்தனர். இதில் சொந்த-பந்தங்களின் எதிர்ப்புகள்.. தன் பணி சுமை போன்ற காரணங்களால் பெரும் போராட்டமே நடத்தி வாழ்ந்தார் எம் தந்தை.

Comments

Popular posts from this blog

மேல் நாட்டு இந்து (சான்றோர்) நாடார் உறவின்முறை சமுதாயம்