மேல் நாட்டு இந்து (சான்றோர்) நாடார் உறவின்முறை சமுதாயம்

மேல் நாட்டு இந்து நாடார் உறவின்முறை 
(18 பட்டி 63 ஊர்கள் வாழ் மேல் நாடு உறவின்முறை நாடார் சமுதாயம் )
*வரலாறு தொகுப்பு*   தாமிரபரணி நதிக்கரை ஓரம் உள்ள மேனாடு உறவின்முறை இன மக்கள் 
வணிக ரீதியாக தென்காசி, திருநெல்வேலி,ஸ்ரீவைகுண்டம்,இராமநாதபுரம்,கொழும்பு,சங்கரன்கோவில்,விருதுநகர்,கழுகுமலை,தேனி போன்ற ஊர்களில் வாணிகம் செய்து வந்தனர்.
மேற்கூறிய ஊர்களில் பூர்வீக நாடார்களும் வாழ்ந்து வந்தனர்.
அவர்களுக்கென்று தனி தனிச் சங்கம் அமைத்தனர்.
அவ்வாறு மேனாடு உறவின்முறை மக்கள் 1856 ம் ஆண்டு  தொடங்கப்பட்டதே இந்த திருச்செந்தூர் தர்ம ஸ்தாபனம் ஆகும்.
இதை தங்களுக்குள் மகமை (வரி) பிரித்து நிர்வகித்து வந்தனர்.

 *வாழ்க்கை முறை* 
தமிழகத்தின் பிற ஊர்களில் வாழும் நாடார் இன மக்களுக்கும் மேனாடு உறவின்முறை நாடார் மக்களுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு.
மற்ற சாதி மக்களிடம் இருந்து தங்கள் சமூக மக்களை காப்பாற்ற 5 குடும்பங்கள் சேர்ந்து கூட்டாக வீடு(காம்பவுண்ட்) கட்டி கட்டி வாழ்ந்தனர்.
இன்றும் அப்படி வீடுகள் உள்ளது.
மேனாடு உறவின்முறை வாழும் ஊர்களில்
பெருமாள் கோவில்கள் 
 அம்மன் கோவில்கள் உண்டு.
காக்கும் தெய்வங்கள் உண்டு.
இத்திருவிழாக்களை நடத்த தங்களுக்குள் மகமை பிரித்து கொண்டாடுவர்.

 *கூட்டு வீடுகள்தொகு* 
ஒரு கூட்டு வீட்டிற்குள் குறைந்தது 5 வீடுகள் இருக்கும். எல்லா கூட்டு வீட்டிற்கும் நடுவில் சிறு மேடை போன்ற ஒரு சவுக்கை தவறாமல் இருக்கும். இந்த சவுக்கையில் தான், இந்த 5 வீடுகளில் நடக்கும் எல்லா சுப மற்றும் துக்க காரியங்கள் நடக்கும். அதற்கு பின்புறம், நெல் மற்றும் தானிய வகைகளை உலர்த்த ஒரு முற்றமும் (தாழ்வாரம்) இருக்கும். இங்கிருக்கும் அனைத்து வீடுகளுக்கும் முற்றத்தின் பின்புறம், சமையலறை மற்றும் மாட்டுத்தொழுவம் தனித்தனியாகவும் வரிசையாகவும் அமைந்திருக்கும். மாட்டுத்தொழுவத்தில் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக பத்தி பிரித்து, மாடுகளுக்கு உணவிட கழனித் தொட்டி மற்றும் கழிவுகளை சேமிக்க கழிவுக்குழி ஒன்றும் இருக்கும். இந்தக் கழிவுக் குழியில் தான் மாட்டின் சாணத்தையும் போடுவர். வீட்டுப் ஆண்கள் அனைவரும் வாய்க்காலில்  குளிப்பர்.

தொழில்தொகு
இச்சமூகத்தினரின் முக்கிய தொழிலே வாணிபம் தான். வணிகம் செய்வதற்காக கொழும்பு வரை கடல் மார்க்கமாக சென்று வருவர். மொத்த விலைக்கடைகள் அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்தது.
வேறு நாடார் பிரிவினர் ஏரல் ஊரை தேர்ந்தெடுத்து கடை வீதி அமைத்து வாழ்ந்து வந்தனர். 
 பெரியகடை வீதியிலும், சிறு மற்றும் சில்லறை விலைக்கடைகள் அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் பஜார் வீதியில் தொடங்கப்பட்டது. ஸ்ரீவைகுண்டம்  கடைவீதிகளில் பொருள் வாங்குவதற்கு சுத்துப்பட்டியிலிருந்து சுமார் 300 கிராமங்களிலிருந்து வாங்கவருவார்கள். ஆனால் இப்போது தொழில்கள் முடங்கியும், சிலர் சின்னக்கடை வீதியிலும், வேறு சிலர் சென்னை மற்றும் வெளியூர்களுக்கு  மாறியும் சென்றுவிட்டனர்.
ஆனால் ஏரல் சுற்று வட்டார நாடார் உறவின்முறை மக்கள் தங்கள் வணிகத்தை இன்று வரை மேம்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

*பண்பாடு மற்றும் கலாச்சார பழக்கவழக்கங்கள்* 
தொகு
உறவின்முறைக்குத் தேவையான பொருட்கள் , கோயில் வரவு செலவு கணக்குகளை   பங்காளிகள் மற்றும்  காரியக்காரர்கள் பார்ப்பர்.
  நாட்டாண்மை மற்றும் காரியக்காரர்கள் அனைவரும் உள்ளனர். 

 *குலதெய்வ வழிபாடு* 
தொகு
அருள்மிகு பத்திரகாளியம்மன் மற்றும் முத்தாரம்மனை குலதெய்வமாக கும்பிட்டு வருகின்றனர். இங்குள்ள பங்காளிகளின் வழிவந்தோருக்கும் குலதெய்வம் உள்ளது. ஆண் தெய்வத்தை மகா சிவராத்திரியன்றும், பெண் தெய்வத்தை ஆடி மாதங்களிலும் கும்பிடுவது வழக்கம்.

 *திருமண முறை* 
தொகு
மேனாடு உறவின்முறை வாழும் 18 பட்டியை விட்டு வெளி்யூரில் பெண் எடுப்பதோ, கொடுப்பதோ இவர்கள் வழக்கத்தில் கிடையாது. 18 பட்டிக்குள்ளே பெண் எடுத்தும், கொடுத்தும் கொண்டனர். அவ்வாறு நிச்சயிக்கப்படும் திருமணத்திற்கு முதலில் மணப்பெண்ணிற்கு பூ வைத்தல் எனும் சடங்கு நிகழ்ச்சி நடக்கும். மாப்பிள்ளையின் சகோதரிகள், மணப்பெண்ணிற்கு பூச்சூட்டி பெண்ணை நிச்சயம் செய்து கொள்வர். இந்நிகழ்ச்சியன்றே திருமண நாளும் குறிக்கப்படும். இதன்மூலம் இந்தப் பெண் இன்னொருவனுக்கு நிச்சயிக்கப்பட்டுவிட்டாள் என்பதை உணர்த்துவதற்காக. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, திருமணத்திற்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்வர். திருமணம் பெண்வீட்டில் தான் நடக்கும், திருமணத்திற்காண பட்டுச் சேலையும், தாலியும் மாப்பிள்ளை வீட்டார் தான் எடுத்துக் கொடுப்பர். வரதட்சனை கொடுப்பதும் வாங்குவதும் தங்கள் சாதிக்கே இழுக்கானதாகக் கருதினர்.

 *முதல் நாள்* 

மணமகனின் சுற்றமும் பந்தமும்,
ஊர் தெய்வங்களுக்கு தேங்காய் -பழம் வெற்றிலை பாக்கு சூடம் காட்டி வழிபடுவர். திருமணத்திற்கு முந்தய நாள் மாலை பெண் வீட்டிற்குச் சென்று நிச்சயத் தாம்பூலம் மாற்றி நிச்சயித்துக் கொள்வர்.

பெண் வீட்டில் 
உறவினர்கள் வாழ்த்துக்களுடன் பெண்ணுக்கு சடங்கு கழிப்பர்.
அன்றிரவு சாப்பாடு நடக்கும்.

 *இரண்டாம் நாள்* 
தொகு
திருமண நாளன்று காலை, மூன்று நாட்டாண்மைகளுள் ஒருவரின் தலைமையில், அவர் தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் நடக்கும். திருமணமும், கூட்டு வீடுகளின் (5 வீடுகள்) சவுக்கையில் தான் நடக்கும். அன்றிரவு மணமகன்  வீட்டிலேயே சாந்தியங்களும் சடங்குகளும் நடக்கும்.

 *மூன்றாம் நாள்* 
தொகு
திருமணத்தின் மறுநாள், சம்பந்தச் சாப்பாடு என்று சொல்லப்படும் கறி விருந்து பெண் வீட்டார் அல்லது மாப்பிள்ளை வீட்டாரால் நடத்தப்படும்.

 *வளைகாப்பு* 
தொகு
இச்சமூகத்தைப் பொறுத்தவரை, வளைகாப்பு என்பதை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. பெண் கர்ப்பமாகி 7 மாதங்கள் நிறைவடைந்தவுடன் பெண் வீட்டிலிருந்து  வந்து, பாக்கு வெற்றிலை கொடுத்து பெண்ணைக் கூட்டிச் செல்வர். பெண்ணைக் கூட்டிச் செல்ல வருவோர் மாப்பிள்ளை வீட்டாருக்கு சாப்பாடு போடுவர்.

முடிவுரை
7000 ஆண்டுகளுக்கு முந்தைய இராம புராண காலத்தில் இருந்து வாழ்ந்து வருகிறோம்.
இராவணன் சீதா பிராட்டியை கடத்தி செல்லும் போது பிராட்டியாரின் கழுத்தில் காவலாக இருந்த குலவிளக்கு முத்து மாலைகளை அத்து ஒவ்வொரு முத்தாக தடயம் விட்டு வந்தார்.
எல்லா முத்துக்களும் விழுந்த இடத்தில் இன்று வரை முத்து மாலையம்மன் ஆக வணங்குகிறோம்.
(முக்கூடல் முத்துமாலையம்மன், குரங்கனி முத்துமாலை அம்மன்,ஆழ்வார் கற்குளம் முத்துமாலையம்மன் அம்மன்,புதியம்புத்தூர் முத்துமாலை அம்மன் மற்றும் தாமிரபரணி நதிக்கரை ஓரம் உள்ள மேனாடு உறவின்முறை மக்கள் வசிக்கும் ஊர்களிலும் முத்துமாலையம்மன் திருக்கோவில் வழிபாடு உள்ளது.
பத்திரகாளியம்மன் 
கள்ளவாண்ட பெருமாள் 
வழிபாடும் 
காவல் தெய்வங்கள் சுடலைமாட சாமி வழிபாடும் உள்ளது. 
ஆனால் கடல் அருகில் விட்ட முத்து மட்டும் ஆக்ரோசமாக சீதா பிராட்டியரை காப்பாற்ற முத்தாரம்மன் ஆக எழுந்ததது.
ஆனால் இராவணன் சிவபக்தன் என்பதனால் அண்ணையை இரும்பு சங்கிலி போட்டு கட்டுண்டார்.
விதிப்படி இராமரின் கையால் இராவணன் அழிய வேண்டும்.

குலசேகரத்தை ஆண்ட மன்னன் அண்ணைக்கு கோவில் அமைத்து வழிபட்டான்.
இன்றளவும் வழிபாடு நடந்து வருகிறது. 


நன்றி.

Comments