தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா ஆழ்வார்கற்குளம் கிராமம் இந்து நாடார் உறவின் முறை சமுதாயத்திற்கும் யாதவ கோனார் சமுதாயத்துக்கும் பாத்தியப்பட்ட அனைத்து சமுதாய மக்களும் வழிபடும்
அருள்மிகு ஸ்ரீ கள்ளவாண்ட சுவாமி திருக்கோவில் உள்ளது.
இந்த கள்ளவாண்ட சுவாமி ஆனவர் நாம் கேட்கும் வரங்களை வழங்கி வருவார்
கள்ளாட்டம் செய்கிறவர்களை துல்லாட்டம் செய்திடுவார்.
முன் ஒரு காலத்தில்  அசுரர்களை அழிக்க அன்னை பார்வதி அம்மன் பத்திரகாளி ஆக உருமாறி அந்த இடத்தில் அசுரர்களை அழித்தார். அந்த இடம் முழுவதும் இரத்த வெள்ளமாக இருந்தது(இன்றும் அந்த இடத்தில் மண் செந்நிறமாக உள்ளது) . அன்னையின் கோபத்தை சாந்தப்படுத்த பெருமாளாக கள்ளவாண்ட சுவாமி வந்து சாந்தப்படுத்தினார். சான்றோர்கள் அனைவரும் அன்னைக்கு பதனீர் படைத்து வழிபட்டு சந்தோசம் அடைந்தனர்.

முன்னோர் கள் வருடா வருடம் அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு
அருள்மிகு ஸ்ரீ கள்ளவாண்ட சுவாமி க்கும் கொடை விழா சிறப்பாக நடத்தி வந்தனர்.
கோனார் மக்களும், சான்றோர்கள் மக்களும் ஒன்று சேர்ந்து கோவில் திருவிழாவை வெகு சிறப்பாக இன்று வரை நடத்தி வருகின்றனர்.
அனைத்து சமூக மக்களும் ஒன்றாக வந்து அருள் பெற்று வளமுடன் நலமுடன் இருக்கின்றனர்.
ஆனால், இக்காலத்தில் பூஜை கள் சரிவர நடைபெறாமல் இருப்பது மிகுந்த மனவேதனை அடைகிறது. 

Comments

  1. கேட்டது கிடைக்கும். முன்னர் எங்கள் ஆச்சி தான் பத்திரகாளி அம்மன் அருள் வந்து அருள்வார்கள்.
    பக்கத்து ஊர் மக்கள் அனைவரும் இங்கு வந்துதான் பேய் ஓட்டி செல்வர்.
    இன்ன தேதியில் இன்ன கிழமையில் அங்க போன. அங்கு தான் உனக்கு இத்துன்பம் வர காரணம் என்று தெளிவாக கூறி., கெட்டதை விரட்டி நல் வாழ்வு அளித்திடும் எங்கள் தாய் பத்திரகாளி அம்மன்.
    ஆனால் இன்று...,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மேல் நாட்டு இந்து (சான்றோர்) நாடார் உறவின்முறை சமுதாயம்